திங்கள், 3 ஆகஸ்ட், 2015

மை நேம் ஈஸ் இனியா ...

இன்று விடுமுறை திவ்யமா சாப்பிட்டுவிட்டு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தேன் அனைவரும் வெளியில் அரட்டையிலிருந்தனர்.

இரண்டரை வயது இனியா பக்கம் வந்தாள். சும்மா பேசலாம் என்று வாட் ஈஸ் யுவர் நேம் என்றேன். பே என முழித்தாள். தெரியாது போல. சொல்லிக் குடுக்கலாம் என முடிவு செய்து. வாட் ஈஸ் யுவர் நேம் னு யார் கேட்டாலும் மை நேம் ஈஸ் இனியா என்று சொல்லனும் என்று சொல்லிக் கொடுத்தேன். ஒரு முறை சொன்னாள். மறுபடி கேட்டால் சொல்லத் தெரியவில்லை.

ஒழுங்கா கண்ண மூடி நாலு டைம் சொல்லு என்றேன்.

கண்ண மூடி
மை நேம் ஈஸ் இனியா
மை நேம் ஈஸ் இனியா
மை நேம் ஈஸ் இனியா
மை நேம் ஈஸ் இனியா என்றாள்.

மாமா , இப்ப கேளுங்க என்றாள். வாட் ஈஸ் யுவர் நேம் என்றால் சரியாக மை நேம் ஈஸ் இனியா என்று சரியாகச் சொன்னாள். இப்ப தான் நமக்கு ஆப்பு ஆரம்பமானது.

மாமா இப்ப நான் கேட்கிறேன். “ வாட் ஈஸ் யுவர் நேம் ?” என்றாள்
நானும் கெத்தாக " மை நேம் ஈஸ் பூபாலன் " என்றேன்.
" அய்யே தப்பு தப்பு, மை நேம் ஈஸ் இனியா  னு சொல்லனும்" என்றாளே பார்க்கலாம். சிரித்து விட்டேன். இல்ல டா நீ தான் அப்படி சொல்லனும் நான் அப்படி சொல்லக் கூடாது என்றால் விடவில்லை.

தப்பு தப்பு. நீங்க தப்பா சொல்றீங்க. ஒழுங்க கண்ண மூடி நாலு டைம் சொல்லுங்க என்றாள் பிடிவாதமாக. வேற வழி..? நானும் கண்களை மூடி

மை நேம் ஈஸ் இனியா
மை நேம் ஈஸ் இனியா
மை நேம் ஈஸ் இனியா
மை நேம் ஈஸ் இனியா

என்று சொன்னேன். இன்னும் சிரிப்பாகச்
சிரித்துக் கொண்டிருக்கும் வாயைத்தான்
மூட முடியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக