திங்கள், 15 செப்டம்பர், 2014

அந்தக் காலம் மீண்டும் வந்தது …



அம்மாவின் வருகையை ஒட்டியா என்று தெரியவில்லை கோவை நகரின் சுவர்களெங்கும் பளிச்சென சுண்ணாம்பு பூசப்பட்டு ஓவியங்களால் நிறைக்கப் பட்டிருக்கின்றன. ஒரு மாதத்துக்கு முன்பே இவற்றைப் பார்த்து விட்டேன். என்றால், இது அம்மாவின் வருகைக்காக இருக்காது என்று கூட நினைத்தேன். எது எப்படியோ மிக அழகாக உள்ளன. முன்பெல்லாம் இச்சுவர்கள் சினிமா சுவரொட்டிகளாலும் , அரசியல் அலப்பறை வாசகங்களாலும் இன்ன பிற அழுக்குகளாலும் நிறைந்து கிடக்கின்ற சுவர்களில் இப்போது குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, இயற்கையக் காப்போம், பெண்களைப் போற்றுவோம் போன்ற வசனங்களுடன் கைகளால் வரைந்த ஓவியங்கள்.


முன்பெல்லாம் சுவர் ஓவியக்காரர்களுக்கு இருந்த மதிப்பையும், டிஜிட்டல் உலகம் வந்த போது தங்கள் தொழிலை இழந்து வேறு வேலைகளுக்கு அவர்கள் சென்று விட்டதைப் பற்றியும் இளஞ்சேரல் அவர்கள் பேசியதாக நினைவு. மிகுந்த திறமைசாலிகளாக அறியப்பட்டவர்கள் தங்களது திறமைகளுக்கான வாய்ப்புகளை பிளக்ஸ், போஸ்டர்கள் போன்ற நவீன யுத்திகளிடம் இழந்து விட்டு வீட்டுக்கு வண்ணம் பூசுதல் மற்றும் இன்ன பிற தொழில்களுக்குச் சென்றிருப்பார்கள்.


அவர்களின் திறமையை மீட்டெடுக்கும் முயற்சியாகவே இச்சாலை ஓவியங்கள் பட்டன எனக்கு. அவர்களுக்கு சுவர்கள் வேண்டும். போஸ்டர்கள் பிளக்ஸ்களுக்குக் கூட சுவர்கள் தேவையில்லை.


இருக்கும் சுவர்களை சாலை ஓவியர்களுக்கான ஒரு வாய்ப்பாக தமிழகம் முழுவதும் தந்தால் அவர்களுக்கும் பேருதவியாக இருக்கும். மேலும், மக்களுக்கும் பழைய நினைவுகளை வித்தியாசமான கோணங்களில் பார்க்கும் வாய்ப்பைப் பரிசளித்த மாதிரி இருக்கும்.



சரிதானே…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக